சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி
X

பைல் படம்.

கட்டிட அனுமதி தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறுவதற்கு, 'வாட்ஸ் ஆப்' எண்களை சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (சி.எம்.டி.ஏ.,) திட்ட அனுமதி தொடர்பாக, பொதுமக்கள் வருவதை பயன்படுத்தி, சிலர் லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அங்கு தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரிகளை சந்திக்க பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படி சந்திக்க வேண்டுமானால், அது குறித்து 'இ - மெயில்' அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவித்து நேரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது கூடுதல் வசதியாக 91500 64456, 91500 64457 ஆகிய மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களில் வாட்ஸ் ஆப் வாயிலாக தொடர்பு கொண்டு அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறலாம் என சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story