மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக ஒருநாள் ஊதியம் வழங்க ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு

மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக ஒருநாள் ஊதியம் வழங்க ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு
X

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்

புயலால் அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் இது சிறு உதவியாக இருக்கும் என கருதுகிறோம் .

மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் அறிவிப்பு.

மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை பொழிவின் காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல முன்னெடுப்புகளை இரவு பகல் பாராமல் எடுத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் மற்றும் மாநில அமைச்சர் பெருமக்களுக்கும், பேரிடர் மேலாண்மை ஊழியர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும், முன்கல பணியாளர்களுக்கும், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மனமார வாழ்த்து கூறி நன்றி பாராட்டுகிறது.

மேலும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முனைப்போடு எடுத்து வரும் சூழலில் தமிழக அரசோடு கைகோர்க்க அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தங்களின் ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து வழங்க முன்வந்துள்ளனர்.

பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புயலால் அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இது சிறு உதவியாக இருக்கும் என கருதுகிறோம் .

எனவே எங்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்குரிய தகுந்த செயல்முறைகளை வெளியிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்வதற்கு, உதவிடும் வகையில் உரிய ஆணை பிறப்பிக்கதமிழ்நாடு முதலமைச்சரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்து எங்களின் முறையான கடிதத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி உள்ளோம். கடந்த காலங்களில் எப்போதெல்லாம் பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்கள் நடைபெற்றதோ அப்பொழுதெல்லாம் எங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்கி மக்களோடு களத்தில் நின்றிருக்கிறோம்.

ஏன் கடந்த கொரோனா பேரிடர் காலங்களில் கூட எங்கள் ஒரு நாள் ஊதியத்துடன் எங்கள் பேரியக்கத்தின் சார்பாக (1,50,3 0,127) ஒரு கோடியே 50 லட்சத்து 30 ஆயிரத்து 127 ரூபாய் வழங்கியிருக்கிறோம் என்பதையும் இது போன்ற பேரிடர் காலங்களில் இன்றும், அன்றும், என்றென்றும் தமிழக மக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முதலில் முன்வந்து களத்தில் இருக்கும் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொண்டு தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலன் சார்ந்து எங்கள் அமைப்பு பயணிக்கும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது