ஆசியாவின் முதல் அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை!
புதுச்சேரியை சேர்ந்த தேசிய கபடி வீரர் ராகுல் காந்திக்கு (வயது 26), திடீர் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டது. இதனால் மஞ்சள் காமாலை நோயும் தொற்றிக்கொண்டது. கோமா நிலைக்கு சென்ற அவர், எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர். இதனால் அவர் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த் கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லிவர் டிசிஸ் ட்ரான்ஸ்பரண்ட் எச்.பி.பி சர்ஜரி இயக்குனர் டாக்டர் தியாகராஜன் சீனிவாசன் கூறுகையில், நோயாளியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இதனை ஒரு சவாலாக ஏற்று அவருக்கு விரைவாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம்
கொரோனா தொற்று முடிந்த 4-5 வாரங்கள் கழித்து முடிவு நெகட்டிவ் என்று வந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவரது இக்கட்டான சூழலில் 24 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் இல்லையென்றால் உயிர் பிரிந்து விடும் சூழலில் இருந்தார்.
கபடி வீரரின் உயிரை காப்பாற்ற எங்களது மருத்துவ குழு செயலில் இறங்கியது. நாடு முழுவதும் உள்ள கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களை அலைபேசியில் அழைத்து தொடர்புகொண்டு ஆலோசனை மேற்கொண்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை துவக்கினோம்.
உயிரோடு இருக்கும் நபர்களிடம் இருந்து கல்லீரல் பெறுவதற்காக அவரது உறவினர்களை தொடர்புகொண்டு பேசினோம். அதில் ஒருவர் கல்லீரல் கொடுக்க முன்வந்ததால் அவரது கல்லீரலை பொருத்த முடிவு செய்தோம். 12 மணி நேரத்திற்குள் டாக்டர் தியாகராஜன் மற்றும் அவரது குழுவினர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இதன் மூலம் கபடி வீரர் ராகுல் காந்தி புதிய கல்லீரலுடன் நோய் பாதிப்பிலிருந்து மீண்டதுடன் கொரோனா தொற்றிலிருந்தும் முழுமையாக மீண்டு வந்தார். இதன் மூலம் ஆசியாவிலேயே ஒரு கொரோனா நோயாளிக்கான அவசர கால கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் சாதனை படைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu