தமிழக கல்லூரிகளில் 26ம் தேதி முதல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழக கல்லூரிகளில் 26ம் தேதி முதல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி தகவல்
X

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி

கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதற்கு, விரிவுரையாளர்கள் அமைச்சர் பொன்முடியை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆட்சி காலத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய குழு அமைக்கப்பட்டதையும், முறைகேடு காரணமாக அந்த குழு கலைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும் எனவும் அனைவரும் அதனை பயனபடுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளது. மாணவர்களுக்கு 22 ஆம் தேதி மதிப்பெண் சென்றடையும்.

கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களின் அடிப்படையில் DOTE மூலம் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!