அண்ணா திமுக சார்பில்‌ தமிழகம் முழுவதும் 25–ல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்

அண்ணா திமுக சார்பில்‌ தமிழகம் முழுவதும் 25–ல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்
X

பைல் படம்

தமிழகம் முழுவதும் 25–ந் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அண்ணா தி.மு.க. மாணவர்‌ அணி சார்பில்‌ தமிழகம் முழுவதும் 25–ந் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அண்ணா தி.மு.க. மாணவர்‌ அணியின்‌ சார்பில்‌ 25 -ஆம் தேதி - புதன்‌ கிழமை வீரவணக்க நாள்‌ பொதுக்கூட்டங்கள்‌ நடைபெறும் என்று அண்ணா தி.மு.க. இடைக்காலப்‌ பொதுச்‌ செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25- ம்‌ நாள்‌ தமிழகத்தில்‌ தொடங்கப்பட்ட போராட்டம்‌ உலகம்‌ கண்டிராத ஒரு மாபெரும்‌ புரட்சியாகும்‌. அந்தத்‌ தியாக வேள்வியில்‌ இன்னுயிர்‌ துறந்த மொழிப்‌ போர்த்‌ தியாகிகளுக்கு வீரவணக்கம்‌ செலுத்துவது நமது விழுமிய கடமையாகும்‌. அன்னைத்‌ தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்‌ வகையில்‌, அண்ணா தி.மு.க. மாணவர்‌ அணியின்‌ சார்பில்‌ 25 ந் தேதி - புதன்‌ கிழமை அன்று, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ "வீரவணக்க நாள்‌ பொதுக்கூட்டங்கள்‌" நடைபெற உள்ளன. கழக சார்பு அமைப்புகளின்‌ துணை நிர்வாகிகளும்‌, கழக சட்டமன்ற உறுப்பினர்களும்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌, தங்கள்‌ மாவட்டங்களில்‌ நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில்‌ கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்‌ என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார் அறிவித்துள்ளார்.

பொதுக்கூட்டங்களில் பேசுவோர் விவரம் வருமாறு: கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, (தலைமை நிலையச் செயலாளர்), மாணவர் அணிச் செயலாளர் டி. ஜேம்ஸ்ராஜா கோவை புறநகர் தெற்கு மாவட்டம்முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, (துணைப் பொதுச் செயலாளர்), மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே.பி. மோகன். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், (கழகப் பொருளாளர்), மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.ராஜேஷ்கண்ணா. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், (துணைப் பொதுச் செயலாளர்), மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பி. கோபி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.

எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் சி.பொன்னையன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.பயாஸ் அகமது வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்.கழக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை, எம்.பி., மாணவர் அணிச் செயலாளர் வி. வெற்றிசெல்வம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (அமைப்புச் செயலாளர்), மாணவர் அணிச் செயலாளர் வி.குருராஜ் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, (அமைப்புச் செயலாளர்), மாணவர் அணிச் செயலாளர் என்.பொன்னுசாமி நாமக்கல் மாவட்டம்.முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ.எம். சதீஸ் திருப்பூர் மாநகர் மாவட்டம்.முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (அமைப்புச் செயலாளர்), மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.எஸ்.கே. கோபால் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எம்.பி., மாணவர் அணிச் செயலாளர் ஜி. சக்திவேல் விழுப்புரம் மாவட்டம்.முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சா. கலைப்புனிதன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ.பி. சக்திவேல் சேலம் மாநகர் மாவட்டம்.முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் டி.மனோகரன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி (மகளிர் அணிச் செயலாளர்), நெத்தியடி நாகையன், மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜி.எம். சாந்தகுமார் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, (அமைப்புச் செயலாளர்), முன்னாள் அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ.பார்த்திபன் மதுரை மாநகர் மாவட்டம்.

முன்னாள் சபாநாயகர் ப. தனபால், முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ், மாவட்டக் கழகச் செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே.ஜி. கோகுல்குமார் கோவை புறநகர் வடக்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், முன்னாள் அமைச்சர் ப.அண்ணாவி தருமபுரி மாவட்டம்.முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், கழக அமைப்புச் செயலாளர் எஸ்.ஆசைமணி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் டி.சுரேந்தர் திருவாரூர் மாவட்டம்.முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், அமைப்புச் செயலாளர் சிவா. ராஜமாணிக்கம், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர். விக்னேஷ் நாகப்பட்டினம் மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ். முத்துசெல்வம் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்.முன்னாள் அமைச்சர் கரூர் எம்.சின்னசாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.சரவணன் கரூர் மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பி.பாண்டியன் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் கடம்பூர் சி. ராஜூ, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.முருகேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பி. மகேந்திரபாண்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே. சதீஷ்குமார் திருவள்ளூர் மத்திய மாவட்டம்.முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் வி.சிவக்குமார் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதா கிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பெ. முருகானந்தம் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம்.மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ். ராகேஷ் திருவள்ளூர் வடக்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் இ.சுரேஷ் நாராயணன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்.மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் உசிலை எம்.பி. முத்துகிருஷ்ணன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ.என்.இ. பூபதி சென்னை புறநகர் மாவட்டம்.

வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் நாராயணி ஜவஹர் சக்திவேல் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்.கழக அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் டேவிட் ராஜன் திருவள்ளூர் தெற்கு மாவட்டம்.அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம. இராசு, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கொளத்தூர் எம். கிருபா வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்.

கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் கே. கோபால், மாவட்டக் கழகச் செயலாளர் ஆ. அருண்மொழிதேவன் கடலூர் மேற்கு மாவட்டம்.மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாணவர் அணிச்செயலாளர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம்.கழக அமைப்புச் செயலாளர் சுதா கே.பரமசிவன், மாவட்டச் செயலாளர் சி.கிருஷ்ணமுரளி தென்காசி வடக்கு மாவட்டம்.

கழக மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.எம்.ஜி. சீனிவாசன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் டி. அறிவழகன் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்.மாவட்டக் கழகச் செயலாளர் சொரத்தூர் இரா. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்ரமணியன் கடலூர் தெற்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜெ. பாக்கியராஜ் கள்ளக்குறிச்சி மாவட்டம்.முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ந. ராமச்சந்திரன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே.ஆர். ரதன் பிரித்திவி ஈரோடு மாநகர் மாவட்டம்.அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சி. கார்த்திகேயன் திருச்சி மாநகர் மாவட்டம்.கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்.

கழக அமைப்புச் செயலாளர் கே.ஆர். அர்ஜூனன், மாவட்டக் கழகச் செயலாளர் கப்பச்சி வினோத் நீலகிரி மாவட்டம்.முன்னாள் அமைச்சர் ஆ. புத்திச்சந்திரன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ.மணிகண்டன் கோவை மாநகர் மாவட்டம்.கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி. ராஜேந்திரன், மாவட்டக் கழகச் செயலாளர் டி.ஜாண்தங்கம் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்.

கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி, முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.கழக அமைப்புச் செயலாளர் வரகூர் அ. அருணாசலம், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் இளம்பை ஆர். தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் மாவட்டம்.கழக கலைப் பிரிவுச் செயலாளர் திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், மாணவர் அணி துணைச் செயலாளர் எம்.டி. பாபு வேலூர் மாநகர் மாவட்டம்.

இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் பரமசிவம், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே.பி.ஜி. ராஜராஜன் மயிலாடுதுறை மாவட்டம்.முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.கலைஅரசன் கடலூர் வடக்கு மாவட்டம்.முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பி.மணிகண்டன் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தனஞ்செயன் திருப்பத்தூர் மாவட்டம்.முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் செந்தில்வேல் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.திலக்குமார் காஞ்சிபுரம் மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே.ஆர். செந்தில்குமார் கடலூர் கிழக்கு மாவட்டம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ.எம்.விக்னேஷ் தூத்துக்குடி தெற்கு மாவட்டம். முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கா. சுந்தரலிங்கம் சிவகங்கை மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கிருபானந்த ஜோதி தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம். முன்னாள் அமைச்சர் அ. மில்லர், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் அழகர்சாமி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.சரவணன் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம். முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜெ. பாலமணிமார்பன் தேனி மாவட்டம்.

முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜி.தணிகைவேல் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.ராமலிங்கம் தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம். தமிழ் நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் என்.தமிழ்மணி சேலம் புறநகர் மாவட்டம். கழக செய்தித் தொடர்பாளர் கோ. சமரசம், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பிரபு ராணிப்பேட்டை மாவட்டம்.

கழக செய்தித் தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார் வேலூர் புறநகர் மாவட்டம். கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.அண்ணாதுரை, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் வேங்கைமார்பன் விருதுநகர் கிழக்கு மாவட்டம். கழக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, மாவட்டக் கழகச் செயலாளர் சி.மகேந்திரன் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்.

கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.சரவணன் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம். இவ்வாறு எஸ்.ஆர்.விஜயகுமார் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!