திமுக அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்
திமுக அரசை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி:
கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.இந்த எட்டு மாத காலத்தில் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திமுக ஆட்சியில் பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.தமிழகத்தில் கஞ்சா,குட்கா போன்ற போதை விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் கட்டப்பஞ்சாயத்து கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையில் பல வீதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.உணவு கிடைக்காமல் மக்களும் பால் கிடைக்காமல் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளை திமுக அரசு செய்யவில்லை.
2015 இல் பெரிதல்ல பாதிப்பு ஏற்பட்டபோது அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கவில்லை.தமிழக மக்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ..2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படவில்லை இது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஏழை எளிய மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு, அது அம்மா பெயரில் செயல்படுவதால் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை மூடி உள்ளது. வெள்ள நீரால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.
விசாரணை என்ற பெயரில் காவல்துறையால் அதிமுக நிர்வாகிகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.அதிமுக அரசால் பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறை தமிழக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கண்டித்துதான் இன்றைய தினம் திமுக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றனர். ஆனால் தற்போது 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என கூறி ஏமாற்றி உள்ளது இந்த அரசு என்றார் எடப்பாடி பழனிசாமி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu