சென்னையில் இன்று முதல் 447 ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் தகவல்

சென்னையில் இன்று முதல் 447 ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் தகவல்
X

பைல் படம்

சென்னையில் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் 447 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை- அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 447 ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்