தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
X
கச்சத்தீவு அருகே நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள் சமீபத்தில் தான் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 43 பேரை கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்பமுடியவில்லை. அதற்குள் மேலும் 21 மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும்.

இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கொரோனா தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அவர்களை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யவும், இலங்கையிடம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!