எம்.ஜி.ஆரை விட தலைசிறந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி : அர்ஜூன் சம்பத்

எம்.ஜி.ஆரை விட தலைசிறந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி : அர்ஜூன் சம்பத்
X

 இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்.

எடப்பாடி பழனிசாமி தான் எம்.ஜி.ஆரை விட தலை சிறந்த முதல்வராக நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்படுகிறார்கள். அதனை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றார். திபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அதேபோல் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என கூறினார்.

குடும்பத்தை கெடுக்கும் மதக்கலவரத்தை தூண்டும், ஜாதியை சொல்லி இழிவு படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தடைசெய்ய வேண்டும் என்றும், கமல் நடிகனாக இருக்கும்போது செய்தது சரி. ஆனால் தற்போது கட்சித் தலைவர் ஆனபிறகும் இதையே செய்து கொண்டிருக்கிறார் என விமர்ச்சனம் செய்துள்ளார்.

இதுவரைக்கும் வந்த முதலமைச்சர்களிலேயே அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, ஏன் எம்.ஜி.ஆரை விட தலை சிறந்த முதல்வராக நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என புகழாரம் தெரிவித்தார். எம்.ஜிஆர் ஆட்சியில் கூட ஊழல் விமர்ச்சனங்கள் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஏழை எளிய மக்களின் ஆட்சியாக இருந்தது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பெருமையோடு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
how to bring ai in agriculture