டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள்-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து
ராமதாஸ் -முதலமைச்சர் ஸ்டாலின்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா Dr. ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எஸ். ராம்தாஸ் எனும் டாக்டர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி எனும் ஊரில் 1939 ம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் சஞ்சீவி ராயர் தாயார் பெயர் நவநீதம் அம்மாள் மனைவி பெயர் சரஸ்வதி
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். இராமதாஸ், தமிழ்நாடு அரசியல் அரங்கை தீர்மானிக்கும் வகையில் சக்திவாய்ந்த நபராக குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்தார். அவரது தலைமையின் கீழ், தமிழ்நாடு மாநிலத்தில் பாமக கணிசமான அதிகாரத்தை பெற முடிந்தது. வன்னியர் சமூகத்தின் நலன்களை மட்டுமே கொள்கையாக கொண்ட வன்னியர் சங்கத்தின் நிறுவனர் இராமதாஸ். திண்டிவனத்தில் மருத்துவராக பணியாற்ற துவங்கிய அவர், விரைவில் அவர் தனது அரசு வேலையை விட்டுவிட்டு ஏழைகளுக்கு சேவை செய்ய சிறிய கிளினிக்கை துவங்கினார்.
டாக்டர் ராமதாஸ் இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் @drramadoss அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் களத்தில் பாமக - திமுக இரு கட்சிகளும் எதிரணியில் இருந்த நிலையில், பிரசாரத்தில் பல காட்டமான கருத்துக்களும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu