மாணவர் மத்தியில் அறிவியலை பரப்பாமல் மதத்தை பரப்புவதா? திருமாவளவன்

சென்னை அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வட்டங்களில் விசிக மற்றும் கூட்டணி கட்சியான திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் திருமாளவன் பேசியதாவது:
நல்ல நோக்கம், கொள்கை புரிதல், கோட்பாட்டு பார்வை உள்ளிட்டவை இல்லாததால் அதிமுக கூட்டணி சிதறி போயுள்ளது. சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அவர்கள் இணைந்தனர். ஆனால் திமுக தலைமையிலான கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் எப்படி கட்டுக்கோப்பாக இருந்ததோ, அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கட்டுக்கோப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், நல்ல உணவு, பாடப்புத்தகம் உள்ளிட்டவைகள் தருகிறோம் ஆனால் கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்கள் காவி துண்டு தருகின்றனர். மாணவர்கள் மத்தியில் அறிவியல் முழக்கத்தை முன் வைக்காமல் மத முழக்கத்தை பாஜக முன் வைக்கிறது.
மோடியா லேடியா என கேட்கின்ற அளவு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலை பெற்று இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஓ. பி.எஸ் அதிமுகவை மொத்தமாக பாஜகவிற்கு எழுதிக் கொடுத்து விட்டனர். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu