அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர்: நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர்: நோயாளிகள் அவதி
X

குரோம்பேட்டை மருத்துவமனை வளாகத்திற்குள் மழை நீர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது .

இதன் ஒரு பகுதியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து மழை காலங்களில் மழை நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழை காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் அவசர சிக்கிச்சை பிரிவு தவிர பிரசவ வார்டு வளாகம்,பொது மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்துள்ளது

இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அறைகுள்ளேயே மழை நீர் சென்றதால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் மேலும் நோயாளிகள் அனைவரும் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர் அத்தியாவசிய பொருட்கள் பெற முடியாமல பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதானால் மருத்துவமனை வளாகத்திலேயே நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மழை நீர் மருத்துவமனைக்குள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!