தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவர்களுடன் போலீசார் கலந்துரையாடல்

தண்டையார்பேட்டையில்  கல்லூரி மாணவர்களுடன் போலீசார் கலந்துரையாடல்
X

தண்டையார்பேட்டையில் நடந்த கல்லூரி மாணவர்கள், போலீசார் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்.

தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவர்களுடன், போலீசார் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடசென்னை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் இருதயம் தலைமையில் தண்டையார்பேட்டையில் அமைந்திருக்கும் தியாகராயா கலைக்கல்லூரியில் வடசென்னை பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுடன் போலீசார் கலந்துரையாடல் நிகழ்சசி நடைபெற்றது.

வடசென்னை பகுதிக்குட்பட்ட கே சி எஸ் கலைக்கல்லூரி மற்றும் புது வண்ணாரப்பேட்டை அரசு கலைக்கல்லூரி மற்றும் கொடுங்கையூரில் இருக்கும் கலைக்கல்லூரி மாணவர்களை ஒன்றாக அழைத்து தண்டையார்பேட்டையில் உள்ள தியாகராய கலைக்கல்லூரியில் வைத்து மாணவர்களிடம் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது

இதில் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும், குற்றச் செயலில் ஈடுபடும் மாணவர்களோடு துணையாகச் சென்று தங்களின் வாழ்வை இழக்காமல் இருப்பதற்காகவும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் இருதயம் மற்றும் தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் நாராயணன் மற்றும் கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உஷா வேல்முருகன் சாயிஷா தயாநிதி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!