தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளிக்க திட்டம்: கராத்தே தியாகராஜன்

சென்னை மாநகர பிஜேபி தேர்தல் பணிக்குழு தலைவர் கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய பா.ஜ.க தேர்தல் பணிக்குழு தலைவர் கராத்தே தியாகராஜன். சென்னை மாநகராட்சி ஆணையர், உள்ளாட்சி தேர்தல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் டெல்லி தேர்தல் ஆணையம் நவம்பரில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையிலே , இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் இறுதி நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு வேட்புமனு தாக்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்
100 சதவிகிதம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது , ஜனநாயகத்தில் சாத்தியமில்லை, இது தொடரபாக தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என பா.ஜ.க சார்பில் இன்று மாலை மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம்.
தேர்தலுக்கு பா.ஜ.க தயாராக உள்ளது. மாநகராட்சி ஆணையரும் ,காவல் ஆணையரும் தேர்தலை நியாயமாக நடத்துவார்கள் என நம்புகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu