சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்கள் அவதி

சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்கள் அவதி
X

சென்னை அடுத்த செம்மெஞ்சேரி பகுதியில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது

செம்மெஞ்சேரி, ஜாவஹர் நகர், எழில்முக நகர் பகுதிகளில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன

கனமழையின் காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னை அடுத்த செம்மெஞ்சேரி, ஜாவஹர் நகர், எழில்முக நகர் பகுதிகளில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் வசிக்ககூடிய பகுதிகளில் சுமார் 2 அடிக்கு மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் தேங்கி மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டாலும் இப்பகுதியில் மட்டும் தொடர்ந்து மழைநீர் தேங்கி வருகிறது.

தேங்கி மழைநீரில் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் நோய்தொற்று பரவும் அபாயத்தை உணராமல் குளித்து விளையாடி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் இச்சாலையினை கடக்க பெரும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர். தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business