மக்களை தேடி மருத்துவம்: 2 நாட்களில் 13,247 பேர் பயன், அமைச்சர் தகவல்

மக்களை தேடி மருத்துவம்: 2 நாட்களில் 13,247 பேர் பயன், அமைச்சர் தகவல்
X

பைல் படம்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 13,24 7 பேர் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5- தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டப்படி சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கு வீடு வீடாக சென்று 2 மாதங்களுக்கு ஒரு முறை தேவையான மருந்து,மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதே போல் பிசியோ தெரபி, டயாலிசிஸ் சிகிச்சைகளும் வீடு வீடாக சென்று அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த திட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 13,247 பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!