ஆர்.கே நகர் தொகுதி : மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா ?
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எனப்படும் ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருக்கிறார். ஆர்.கே நகர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,62,738 ஆகும்.
சென்னை பெரு வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் ஒன்றாக ஆர்.கே நகர் இருந்தது.குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுகட்ட கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
குடிநீர் குழாய்களில் எண்ணெய்க் கசிவு கலப்பதால் நோய் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் மக்கள் தூய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவைகளை யார் நிறைவேற்ற உறுதி கூறுகிறார்களோ அவர்களுக்கு எங்கள் வாக்கு உண்டு. அது எந்த கட்சி என்ற பாகுபாடு இல்லை என்கிறார்கள் மக்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu