திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
X

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலின், 

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் தெரிவித்தது.

ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக்கட்சித் தலைவர்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும்,

பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கமல் பதிவிட்டுள்ளார்.

திமுக அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக்கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story