ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணம், செல்போனுக்காக கொரோனா பெண் நோயாளி கொலை
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் கரோனா நோயாளி 8வது மாடியில் பிணமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் பெண் ஊழியர் ஒருவர் சிக்கியுள்ளார்.
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மெளலி (48), இவர் தனியார் கல்லுாரி துணைப் பேராசிரியர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி சுமிதாவை (41). கடந்த மே 21ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்குள்ள டவர் மூன்றாவது மாடியில் உள்நோயாளியாக சுமிதா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இன்நிலையில் கடந்த மே 22ம் தேதி இரவு, மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்ற கணவர், மறுநாள் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது சிகிச்சை வார்டில் மனைவியைக் காணவில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். பின்னர் அவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஒருவாரம் ஆகியும் காணாமல்போன மனைவி குறித்துத் தகவல் கிடைக்காததால் மே 31 தேதி பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை 8வது மாடியில் மின் பகிர்மான அறையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது தெரியவந்தது. பிணம் கைப்பற்றப்பட்டு சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டது. மெளலியின் புகார் அடுத்து அரை அழைத்துச் சென்ற போலீஸார் பெண் பிணத்தைக் காட்டியுள்ளனர்.
அந்தப் பிணம் சுமிதாவினுடையதுதான் என்று அடையாளம் காட்டினார். 3-வது மாடியிலிருந்து சுமிதா எப்படி 8வது மாடிக்குச் சென்றார், அங்கு அவர் எப்படி மரணமடைந்தார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பப்பட்டது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.
ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட சுமிதாவால் எப்படி 8வது மாடி வரை செல்ல முடிந்தது, மின் பகிர்மான அறையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடப்பது மருத்துவமனை நிர்வாகத்தால் எப்படிக் கண்டறிய முடியாமல் போனது, 23ம் தேதி காணாமல் போனவர் 31ஆம் தேதி வரை ஏன் தேடப்படவில்லை, எப்போது சுமிதா இறந்தார் ஆகிய கேள்விகள் எழுந்தன.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பெண் ஊழியர் பணம் மற்றும் செல்போனுக்காக பேராசிரியர் மனைவியைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை போலீஸார் மருத்துவமனை ஊழியர் அவரை கைது செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu