சென்னை திருமண மண்டபத்தில் இருதரப்பினர் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை திருமண மண்டபத்தில் இருதரப்பினர் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு
X

தண்டையார்பேட்டை திருமண மண்டபத்தில் டான்ஸ் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு வெட்டு விழுந்த மண்டபம்.

அரிவாள் வெட்டு விழுந்த

சென்னை திருமண மண்டபத்தில் டான்ஸ் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தினகரன் என்பவருக்கும் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இரு வீட்டாரும், நண்பர்களும் டிஜே பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது மணமகளின் அண்ணன் வினோத் என்பவரின் நண்பர்களுக்கும், மணமகனின் நண்பர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே நடந்த தகராறு முற்றவே வெளியில் சென்ற வினோத்தின் நண்பர்கள் ஆகாஷ், ஜான், தோத்து, வசந்த் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் திடீரென திருமண மண்டபத்தின் உள்ளே புகுந்தனர்.

மணமகனின் நண்பர்களான தினேஷ், யுவராஜ், ஹேமந்த் அவர்களை சரமாரியாக தாக்கி அரிவாள் மூலம் வெட்டி அங்கிருந்து தப்பி சென்றது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வெட்டுப்பட்ட 3 பேரை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்குபெறும் நிலையில், மணமக்களின் நண்பர்கள் என பங்கேற்ற இருதரப்பினர் டான்ஸ் ஆடுவதில் மோதல் ஏற்பட்டு வெட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!