சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி

சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
X
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலித்ததால், 10.81 லட்சம் ரூபாய் தப்பியது.

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் கிளை, சென்னை, ராயபுரம், எஸ்.என்., செட்டி சாலையில் செயல்படுகிறது. நேற்றிரவு, வழக்கம் போல் பணிகள் முடித்து, ஷட்டரை மூடி விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை வங்கி கிளையில் இருந்து அபாயத்தை உணர்த்தும் அலாரம் ஒலித்ததால், திருச்சூரில் இருந்து, கிளை மேலாளர் சுஜாதாவிற்கும், தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காசிமேடு போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தரைதளத்தின் நுழைவாயில் பூட்டு உடைக்கப்பட்டு, முதல் தளத்தில் இயங்கும் நிதி நிறுவனத்தின் ஷட்டர் கம்பி வளைக்கப்பட்டு, சில அடி உயரத்திற்கு துாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அலாரம் சத்தம் கேட்கவே பயந்து போன கொள்ளையர்கள், திருடும் முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால், நிறுவன லாக்கரில் இருந்த, 10.81 லட்சம் ரூபாய் தப்பியது. இது குறித்து, காசிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india