கொரோனா வழிமுறைகளை கடைப்பிடித்தால் எந்த அலை வந்தாலும் சந்திக்கலாம்: ராதாகிருஷ்ணன்

கொரோனா வழிமுறைகளை கடைப்பிடித்தால் எந்த அலை வந்தாலும் சந்திக்கலாம்: ராதாகிருஷ்ணன்
X

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி செல்லும் முன் விமானநிலையத்தில் பேட்டி அளித்தார்.

கொரோனா வழிமுறைகளை பின்பற்றினால் எந்த அலை வந்தாலும் சந்திக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுபாட்டிற்கு முதலமைச்சர் மத்திய அர்சை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய சுகாதார துறை அதிகாரிகளை சந்தித்து தடுப்பூசி கேட்பது, எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவு படுத்துவது,

11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இந்தாண்டே தொடங்குவது, கருப்பு புஞ்சை மருத்தை கூடுதலாக பெறுவது உள்பட பல்வேறு விசயங்கள் பற்றி பேசி வலியுறுத்தப்படும். புதிய மத்திய சுகாதார துறை அமைச்சர் அனுமதி தந்ததும் தமிழக அமைச்சருடன் மீண்டும் சென்று சந்திக்க உள்ளோம்.

மாணவர் சேர்க்கை குறித்து மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். 250 மாணவர்கள் சேர்க்கை தற்காலிகமாக தொடங்குவது குறித்து முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர் முலம் தெரிவிக்கப்படும்.

நீட் தேர்வு குறித்து கமிஷன் ஆராய்ந்து வருகிறது. ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. டெல்லி பயணம் தடுப்பூசிக்காக இருக்கும். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடக்கிறது.

2 கோடி வரை தடுப்பூசி போடலாம். இந்த மாதம் 71 லட்சம் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி பணி வேகமாக செல்லும் போது இல்லாததால் நின்றுவிடுகிறது.

தடுப்பூசி சீராக வருவதற்கும் ஜன தொகை அடிப்படையில் வழங்குவது குறித்து பேசப்படும். ஜன தொகை அடிப்படையில் தமிழகத்திற்கு குறைந்த அளவில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

கட்டுபாட்டுகளுடன் உள்ள தளர்வுகள் என்பதை மக்கள் உணர வேண்டும். மெரினா கடற்கரையில் எந்தவித பாதுகாப்பின்றி மக்கள் செல்கின்றனர்.

எந்த மாதிரியான உருமாறிய கொரோனா வந்தாலும் நெறிமுறைகளை கைப்பிடிக்க வேண்டும். தளர்வுகள் மட்டும் இல்லாமல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முக கவசம், தள்ளி நிற்பது, கை கழுதல் போன்ற அடிப்படை பழக்கங்களை பின்பற்றினாலே கொரோனா வராமல் தடுக்க கூடிய ஆயுதம்.

தடுப்பூசி போட்டு கொள்வது. தளர்வுகள் வரும் போது எல்லாரும் கடைசி நாள் என்று கடைகளுக்கு சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது தவிர்க்க வேண்டும். அப்போது தான் கட்டுபடுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!