தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை - பொன்முடி

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை - பொன்முடி
X

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வரும் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவை சந்தித்த பிறகு பேசிய பொன்முடி, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்களின் நடமாட்டம் இருக்கிறது. ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில், 31 பேர் லேப்டாப் உடன் சென்றுள்ளனர் என்றால் அதனுடைய பொருள் என்ன? 13ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தைக் கண்டித்து 13ஆம் தேதியே புகார் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என பேசிய அவர் தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது.

இங்கே தேர்தல் ஆணையரிடம் புகார் சொன்னால், 'நான் கேட்கிறேன், கேட்கிறேன்' என சொல்கிறார்கள். அவர்களுக்கே தெரியுமா, தெரியாதா எனத் தெரியவில்லை'' எனக் கூறினார்.

Tags

Next Story
ai marketing future