ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பனை: மருத்துவர் கைது

ரெம்டெசிவிர் மருந்து  கள்ள சந்தையில் விற்பனை: மருத்துவர் கைது
X
ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்ற மருத்துவர் கைது - தாம்பரத்தில் பரபரப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு அதிகமாக எழுந்துள்ளது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்கும் கும்பலும் திரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாம்பரம் தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான்கான் என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்கி வெளியே 20 ஆயிரம் வரை விலை வைத்து விற்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அருகே நடந்த வாகன சோதனையின்போது, முகமது இம்ரான்கான் பிடிபட்டதுடன் உண்மையும் ஒத்துக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளதுடன் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் நலனுக்காக ரெம்டெசிவிர் மருந்தை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் நேரத்தில் கள்ளச்சந்தையில் இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!