/* */

மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள்-எச்சரிக்கை வீடியோ

மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ வெளியிட்டார்.

HIGHLIGHTS

மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள்-எச்சரிக்கை வீடியோ
X

மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ.

கொரோனா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், "கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வதைத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையால் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளோம்.

ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் எச்சரிக்கை இன்றி இருப்பது வேதனையளிக்கிறது. அதனால் அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட கூடாது என்றே கடைகளை திறக்க உத்தவிட்டுள்ளோம், ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது.மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வல்லமையும், உட்கட்டமைப்பும் தமிழக அரசுக்கு உண்டு, அதனால் கொரோனாவை விலை கொடுத்து வாங்க வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என வல்லுனர்கள் சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நாம் மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் என தெரிவித்திருக்கிறார்.

Updated On: 2 Aug 2021 2:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!