செல்போன் எண்கள் மூலம் பட்டுவாடா..? திமுக புகார்

செல்போன் எண்கள் மூலம் பட்டுவாடா..? திமுக புகார்
X

அதிமுக செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார். பணம் கொடுப்பதற்காக வாக்காளர்களின் அடையாள அட்டை, செல்போன் எண்களை அதிமுக சேகரிப்பதாக திமுக புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும் அளிக்கவில்லை. எத்தனை பேருக்கு எவ்வளவு தொகையை அனுப்பப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!