6 வது முறையாக ஆட்சி அமைக்கும் திமுக.. முக்கிய அமைச்சர்கள் 9 பேர் தோல்வி

6 வது முறையாக ஆட்சி அமைக்கும் திமுக.. முக்கிய அமைச்சர்கள் 9 பேர் தோல்வி
X

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் 9 பேர் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமார் 27் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் மூர்த்தியிடம் படுதோல்வியடைந்தார். ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசரிடம் தோல்வியடைந்தார்.

அதேபோல், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3,468 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் தங்க பாண்டியனிடம் தோல்வியடைந்தார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க வேட்பாளர் ஆர்லட்சுமணனிடம் 15,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்ல்மண்டி நடராஜன், தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் 18,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா, கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத், மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோரும் படுதோல்வியை சந்தித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்