திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்தார் மநீம தலைவர் கமலஹாசன்

திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்தார் மநீம தலைவர் கமலஹாசன்
X
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கட்சி 158 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களிலும் நேரிலும் சென்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வராக மே 7 அன்று பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!