தலைநகரை வசமாக்கிய திமுக!.

ஸ்டாலின்
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்தையும் 25 வருடங்களுக்குப் பிறகு திமுக கைப்பற்றி சென்னையை தனது கோட்டையாக திமுக மாற்றியிருக்கிறது.
ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய 15 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும் வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கு முன்பாக திமுக சென்னை மாவட்ட தொகுதிகளில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், முறையே 8, மற்றும் 6. 2011 தேர்தலில் 2, 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்,10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இப்போது (2021) தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி தலைநகர் சென்னையை தன் வசமாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu