உள்ளாட்சி தேர்தல்: திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல்: திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

மு.க. ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, திமுக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக, அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!