தமிழ் இருக்கைக்கு 10 லட்சம் நிதியுதவி - முக ஸ்டாலின்

தமிழ் இருக்கைக்கு 10 லட்சம் நிதியுதவி  - முக ஸ்டாலின்
X
கனடாபல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.10 லட்சம் நிதியுதவி திமுக சார்பில் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு, கனடா வாழ் தமிழர்களும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு திமுகவின் சார்பில் நிதியுதவி தந்திட வேண்டுமென்றும் கனடியத் தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குநர் டன்ரன் துரைராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, எத்திக்கிலும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் மொழிச் சிறப்புக்கும் என்றென்றும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் திமுகவின் சார்பில், கனடா டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

செம்மொழித் தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும் - இளைஞர்களின் தாய்மொழித் தாகத்தைத் தீர்க்கட்டும்!". இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future