இயக்குனர் சங்கரின் தாயார் காலமானார்!

இயக்குனர் சங்கரின் தாயார் காலமானார்!
X
இயக்குனர் சங்கரின் தாயார்
பிரபல இயக்குனர் சங்கரின் தாயார், வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

மிகப்பெரிய இயக்குனர் என்று பெயர் பெற்றவர் சங்கர். சங்கர்படம் என்றால் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது அனைவரின் கருத்தாகும். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் அதிக வசூலை வாரித்தந்துள்ளது.

இந்தநிலையில், இயக்குனர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி(88) வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். சங்கரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது தாய் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!