மே 2ம் தேதிக்கு முன்பு தபால் வாக்குகளை எண்ணக் கூடாது - அமைச்சர் ஜெயகுமார் மனு

மே 2ம் தேதிக்கு முன்பு தபால் வாக்குகளை எண்ணக் கூடாது - அமைச்சர் ஜெயகுமார் மனு
X

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயகுமார் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது, அவர் கூறியிருப்பதாவது :- மக்கள் பிரதிந்தித்துவ சட்டத்தின்படி, வாக்கு எண்ணும் நாளில் மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக எண்ணப்படக் கூடாது. கடந்த கால வழிமுறைகள் தான் கடைப்பிடிக்க வேண்டும்.

மே1 ஆம் தேதியே தபால் வாக்குகள் கட்டுக்கள் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்க உள்ளதாக சில மாவட்டங்களில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் புகார் அளித்துள்ளார்கள். இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். யாரும் எவ்வித குறையும் சொல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் செயல்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாக்கு எண்ணும் மேசைகள் எந்த காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது என அமைச்சர் ஜெயகுமார் மனுவில் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!