மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் மகா சமாதி தினம் பக்தர்கள் வழிபாடு

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் மகா சமாதி தினம் பக்தர்கள் வழிபாடு
X

பைல் படம்.

சாய்பாபாவின் 103வது மகா சமாதி தினத்தையொட்டி, மயிலாப்பூர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

சாய்பாபாவின் 103-வது மகா சமாதி தினத்தையொட்டி, இன்று அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன.

மயிலாப்பூரில் உள்ள கோவிலில் இன்று பக்தர்கள் சாய்பாபா சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்துக்கு உலகம் முழுவதும் கோடான கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். சாய்பாபா 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார்.

விழாவில் சாய்பாபா பற்றிய பக்தி சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாய்பாபா சிலையை பல்லக்கில் வைத்து பெண்கள் நடனமாடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அன்பின் மேடையில் சாய்பாபா பற்றிய பாடலுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாய்பாபா சரித்திர நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட அதனை தொழில் அதிபர் வீரமணி எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags

Next Story
ai solutions for small business