சென்னை விமானநிலையத்தில் தங்கப்பசை பறிமுதல்: சுங்கத்துறையினா் நடவடிக்கை

சென்னை விமானநிலையத்தில் தங்கப்பசை பறிமுதல்: சுங்கத்துறையினா் நடவடிக்கை
X

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கபசை 

சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1.20 கோடி மதிப்புடைய 2.76 கிலோ தங்கப்பசையை சுங்கத்துறையினா் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர்

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ஜமீன் கமல் (35) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து சுங்கத்துறையினா் ஜமீன்கமலை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சல் கைப்பற்றினர். அதனுள் தங்கப்பசையை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பாா்சலில் இருந்த 1.53 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மதுரையை சேர்ந்த அபூதாஹிர் (38) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரையும் நிறுத்தி சோதனையிட்ட போது, அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பாா்சலில் 1.23 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

துபாய் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்தி வந்த 2.76 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா்.அதன் மதிப்பு ரூ.1.20 கோடி.இதையடுத்து சுங்கத்துறையினா், 2 கடத்தல் பயணிகளையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ai future project