சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்

சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
X

பைல் படம்.

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் போக்குவரத்து தற்போதைய நிலவரங்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தி.நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜி.என்செட்டி சாலைவாணி மஹால் சந்திப்பிலிருந்து பசூல்லாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது.

சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

சென்னையின் பலபகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இம்மழையின் காரணமாக தண்ணீர் தேங்குவதோ, மற்றும் எவ்வித போக்குவரத்து இடையூறும் இல்லை என தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!