நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மே.24 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பாதிப்பு குறையவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து நாளை (மே.15) முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாளை (மே.15) முதல் டீக்கடைகள் இயங்க அனுமதியில்லை.
* மே. 17 முதல் மாவட்டங்களுக்குள்ளும், வெளியேயும் பயணிக்க இ.பாஸ் கட்டாயம்.
* ஏற்கனவே காலை 6 மணி முதல் நன்பகல் 12 மணி வரை இருந்த நேரம் குறைப்பு
* மளிகை, காய்கறி மற்றம் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்க அனுமதி
மற்ற கடைகளுக்கான தடை தொடரும்.
* காய் கறி, பூ, மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்க அனுமதி இல்லை.
* அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிற்கு அருகே உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.
* ஏ.டி.எம்.கள், பெட்ரோல் பங்குகள் எப்போதும் போல் செயல்படும்
.* ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் மளிகை பொருட்கள், காய்,கறி விற்பனைக்கு காலை 10 மணி வரை அனுமதி.
*ஆங்கில ,நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
* மருத்துவ தேவைகளுக்காக பயணம் மேற்கொண்டாலும் இ.பதிவு கட்டாயம்.
* திருமணம்,இறப்பு போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ.பதிவு கட்டாயம்.
* பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து அதிக தொலைவிற்கு செல்ல அனுமதியில்லை.
இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் 16 ம் தேதி மற்றும் 23ம் தேதிகளான ஞாயிற்றுகிழமைகளில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும். மின் வணிக நிறுவனங்கள் மதியம் இரண்டு மணிமுதல் 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu