கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் வாங்க அலை மோதும் மக்கள் கூட்டம்

கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் வாங்க அலை மோதும் மக்கள் கூட்டம்
X
கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்.

ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்தானது தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் கழகம் சார்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது

100 எம்ஜி ரெம்டெசிவிர் (1 வயல் என்பது) மருந்து ரூ.1568 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 வயல்கள் என்பது ரூ.9408 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரெம்டெசிவிர் ஊசி மருந்து என்பது பல நாட்களாக தமிழகத்தில் தட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் இந்த தட்டுப்பாடு இருந்து வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் 2 முதல் 3 நாட்கள் இங்கேயே தங்கி இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி நேற்று டோக்கன் வாங்கிய 300 நபர்களுக்கு இன்று மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. இன்று புதிதாக வந்துள்ள முதல் 250 பேருக்கு நாளை மருத்துவ வாங்குவதற்கான டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!