தகன மேடை பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே: அமைச்சர் அறிவிப்பு!

தகன மேடை பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே: அமைச்சர் அறிவிப்பு!
X

கொரோனா சடலங்களை எரியூட்டும் பணியாளர்கள்

தகனமேடையில் பணியாற்றுபவர்களும் இனி முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கொரரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டனர். இதனால் இவர்கள் முன்களப்பணியாளர்களாக முந்தைய அரசு அற்வித்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தைபோது, செய்தியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்தது.

கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றிவரும் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக பெரியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நோயாளிகளை எரியூட்டும் வேலையில் ஈடுபடுபவர்களும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றியே ஆக வேண்டும். எனவே தகன மேடைகளில் பணிபுரிபவர்களும் கொரோனா முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!