கோயம்பேடு மேம்பாலம் 10 நாளில் திறக்கப்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
கோயம்பேடு மேம்பாலம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்பேடு மேம்பாலத்தை தீபாவளிக்குள் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
சென்னை கோயம்பேடு 100 அடி சாலை-காளியம்மன் கோவில் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 100 அடி சாலை-காளியம்மன் கோவில் சாலை, புறநகர் பஸ் நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
ரூ.94 கோடி செலவில் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேம்பாலப்பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மேம்பாலத்தை இன்னும் 10 நாளில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முக ஸ்டாலின்;
அதன் பேரில் இந்த மாதமே மேம்பாலத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்)சர்தார் படேல் சாலையை இணைக்கும் விதமாக ரூ. 56 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க உள்ளது.
அதேபோல், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் ராமாபுரம், முகலிவாக்கம் சந்திப்புகளில் 3.14 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலமும், மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில் கீழ்பாலம் ஆகிய 2 பாலங்களும் ரூ.403 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைந்து இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. தாம்பரம் பகுதியில் கிழக்கு மேற்கு தாம்பரம் முடிச்சூர் பகுதியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாலம், இணைப்பு சாலை மற்றும் சண்முகம் சாலை ஜி.எஸ்.டி சாலை இணைப்பு பாலம் ஆகிய பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி அடுத்த மாதத்தில் தொடங்கப்படுகிறது. இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu