கோவாக்சின் தடுப்பூசி விலை குறைந்தது..!

கோவாக்சின் தடுப்பூசி விலை குறைந்தது..!
X
அப்பாடா.. இனி கவலை வேண்டாம் கோவாக்சின் தடுப்பூசி விலை குறைந்தது..!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் மாநிலங்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் 600 ரூபாயக்கும், தனியார் மருத்துவமனைகளில் 1200க்கும் விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது.

தற்போது ஒரு டோஸ் ரூ.600 லிருந்து ரூ.400 ஆக குறைந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரூ.200 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே நிர்ணயித்த ரூ.1200 என்ற விலையில் மாற்றமில்லை என பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai ethics in healthcare