பொதுச் செயலாளர் பதவி: சசிகலா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பொதுச் செயலாளர் பதவி: சசிகலா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
X

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த மனுவில், சசிகலா பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகள் சசிகலா தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் விதிமுறைகளை மீறி நடந்ததால் அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி ரவி முன்பு கடந்த முறை விசாரனைக்கு வந்த போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால், அதிமுக-விற்கு எதிரான வழக்கை கைவிடுவதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags

Next Story
நீங்க ஒழுங்கா தூங்குறீங்களா? உங்க குழந்தைங்க....! கட்டாயம் கவனிங்க..!