சென்னையில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக கொரோனா வார்டு

சென்னையில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக கொரோனா வார்டு
X

முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் பிடியில் அப்பாவி மக்கள் மட்டுமின்றி காவல் துறையினர் சிலரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆக்கத்தின் கீழ் சென்னை எழும்பூரில் தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் காவலர் மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் உதவியுடன் நாளைய தேதி அதாவது மே 26 முதல் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்படுகிறது.

இதில் 75 நபர்களுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மிதமான கொரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture