30-40 வயதினரை குறிவைக்கும் கொரோனா..?

30-40 வயதினரை குறிவைக்கும் கொரோனா..?
X

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதியவர்கள் அதிகம் பாதித்த நிலையில், இந்தாண்டு இளைஞர்கள் பெரும் அளவில் தொற்றுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவிகிதம் பேரும் 40 முதல் 49 வயதினர் 18.37 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் 50 முதல் 59 வயதினர் 17.97 சதவிகிதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவிகிதமும் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது என்ற செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!