கொரோனா எதிரொலி: சென்னையில் 5.99 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரோனா எதிரொலி: சென்னையில் 5.99 லட்சம் பேருக்கு தடுப்பூசி
X

சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 5.99 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையில் 4,082 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மார்ச் 25-ஆம் தேதி ஒரே நாளில் 31,633 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனுடன் சேர்த்து இதுவரை சென்னையில் ஒட்டுமொத்தமாக 5,99,044 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!