அப்பாடா, கொஞ்சம் நிம்மதி! கொரோனா வேகம் குறைந்ததாக சுகாதாரத்துறை செயலர் தகவல்

அப்பாடா, கொஞ்சம் நிம்மதி! கொரோனா வேகம்  குறைந்ததாக சுகாதாரத்துறை செயலர் தகவல்
X
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில், கொரோனா நோய் கட்டுபாட்டு பகுதியில் உள்ளவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்காக, கூடுதலாக 12 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்படும். இதில் 2000 படுக்கைகள் இந்த வாரம் முதல் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் கொரோனா தொற்றின் பரவல் வேகம் சற்று குறைந்திருக்கிறது. தமிழகத்திற்கு, 52 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தேவையானவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்க வேண்டும். படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இது தவிர கொரோனா பாதிப்பில் சித்த மருத்துவம் நமக்கு கை கொடுத்திருக்கிறது. மீண்டும் முழுவீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை அதிகரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil