சென்னையில் கொரோனா சித்த மருத்துவ மையத்தை திறந்து வைத்தார் டி.ஆர். பாலு

X
டி.ஆர்.பாலும் எம்.பி.
By - C.Pandi, Reporter |19 May 2021 3:22 PM IST
சென்னையில் கொரோனா சித்த மருத்துவ மையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.
சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவீர் மாத்திரை வழங்கும் பணியும் மறுபக்கம் தீவிரமாக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சைக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை மையத்தை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu