கொரோனா விதிமுறைகள் - அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

கொரோனா விதிமுறைகள் - அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
X

தேர்தல் பரப்புரை, வாக்குபதிவின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் வேட்பாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கூறி அனைத்து அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!