தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது!

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது!
X
ரூ.2 ஆயிரம் நிதி பெறுவதற்கான டோக்கன் பெற்றவர்கள் அதனை காண்பிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.

கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக இந்த மாதம் 2 ஆயிரம், அடுத்த மாதம் 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு அறிவித்து இருந்தது.

முன்னதாக இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் 10-ம் தேதி தொடங்கி வைத்தார். எனவே வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அந்த டோக்கன்கள் மூலம் இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் நியாய விலைக் கடைகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கொரோனா வைரஸ் நிவாரண முதல் தவணைத் தொகையை பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். மேலும் தவணை தொகை எந்த புகாருக்கும் இடமின்றி வழங்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்