முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று..!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று..!
X

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதில் கூறியதாவது, கொரோனா தொற்று உறுதியானதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future